சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.50 லட்சத்து 47 ஆயிரம் வசூலானது.


சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.50 லட்சத்து 47 ஆயிரம் வசூலானது.
x

சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.50 லட்சத்து 47 ஆயிரம் வசூலானது.

தஞ்சாவூர்

சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.50 லட்சத்து 47 ஆயிரம் வசூலானது.

தகப்பன்சுவாமி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். முருகப்பெருமான் இக்கோவிலில் 'தகப்பன்சுவாமி' என அழைக்கப்படுகிறார்.

முருகன் குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மற்றொரு பெயர் திருவேரகம் ஆகும். இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் ஏற்பட்டதாக தல புராணம் கூறுகிறது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சியுடன் அருள்பாலிக்கிறார்.

காணிக்கை எண்ணும் பணி

பிரசித்திப்பெற்ற இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலின் பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

65 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

வங்கி கணக்கில்...

இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.50 லட்சத்து 47 ஆயிரத்து 14 வசூலானது. மேலும் 54.500 கிராம் தங்கம், 1 கிலோ 936 கிராம் வெள்ளி, 153 வெளிநாட்டு கரண்சி நோட்டுகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்தன. காணிக்கை முழுவதுமாக எண்ணப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

உண்டியல் எண்ணும் பணிகளை இந்து சமய அறநிலைய துறை மயிலாடுதுறை உதவி ஆணையர் முத்துராமன், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர்கள் சுதா, பழனிவேல், கும்பகோணம் ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story