ரதமுடைய அய்யனார் கோவில் திருப்பணிக்கு நன்கொடை


ரதமுடைய அய்யனார் கோவில் திருப்பணிக்கு நன்கொடை
x

சோலைசேரி ரதமுடைய அய்யனார் கோவில் திருப்பணிக்கு நன்கொடையை, எஸ்.அய்யாத்துரை பாண்டியன் வழங்கினார்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்விக்குழும தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான எஸ்.அய்யாத்துரை பாண்டியனிடம் ஊத்துமலையை அடுத்த சோலைசேரியில் உள்ள ரதமுடைய அய்யனார் கோவிலுக்கு அலங்கார நுழைவுவாயில் மற்றும் கோபுரம் அமைத்து தரும்படி கோவில் நிர்வாகிகளான 21 கிராம தேவர் சமுதாய நாட்டாமைகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி குற்றாலம் ஏ.ஏ.ஆர். ரிசார்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் கோவில் அலங்கார நுழைவுவாயில் மற்றும் கோபுரம் ஆகியவை அமைப்பதற்கான திருப்பணிக்கு சமுதாய நாட்டாமைகளை அழைத்து நன்கொடை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊத்துமலை இளைய ஜமீன் குமரேசராஜா, எஸ்.அய்யாதுரை பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, பேரவை செயற்குழு உறுப்பினர் பூலோகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story