கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க கூடாது


கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க கூடாது
x

கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க கூடாது

திருப்பூர்

திருப்பூர்

பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதி கேட்கும் கல்குவாரிகள் தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டுள்ள கல்குவாரிகள் குறித்து உண்மையான நிலவரங்கள் தெரிவிக்கப்படாமல் பல தவறான தகவல்கள் இருப்பதாக தெரிகிறது. எனவே இதன் உண்மை தன்மை முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். கல்குவாரிகளுக்கு அருகில் உள்ள வீடு, கோவில், குளம், ஏரி, நீர்த்தேக்க தொட்டி, ஊர் என பல்வேறு விவரங்களை மறைத்து தூரத்தில் உள்ளதை மட்டும் தெரிவித்துள்னர்.

இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் திறந்த வெளி கிணற்றில் தண்ணீர் வற்றி விவசாயம் பாதிப்படைந்துள்ளது குறித்து சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் இடம்பெறவில்லை. எனவே, தவறான தகவல் வழங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து தடை பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும், இந்த குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு நிரந்தர தடை போட வேண்டும். இதேபோல் சுற்றுச்சூழல் அனுமதிக்காக கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெற உள்ள பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story