கட்டிட கழிவுகளை பொது இடத்தில் கொட்டக்கூடாது
கட்டிட கழிவுகளை பொது இடத்தில் கொட்டக்கூடாது
திருப்பூர்
காங்கயம்
காங்கயம் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காங்கயம் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட பணி மேற்கொள்ளும்போது, கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டி வைக்கக் கூடாது. இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சியின் நகரமைப்பு பிரிவில் உரிய அறிவுரை பெற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிவுரைகளை ஏற்காத கட்டிட உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----
Related Tags :
Next Story