பாலாற்றில் இறங்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம்


பாலாற்றில் இறங்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம்
x

பாலாற்றில் இறங்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையினால் பாலாற்றில் வெள்ளநீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் புல்லூர் தடுப்பணைக்கு தாண்டி ஆந்திர மாநிலத்தில் இருந்தும், அதேபோல வேலூர் மாவட்டத்தில் இருந்து மோர்தானா அணை மற்றும் அகரம் ஆறு, கிளை ஆறுகளில் இருந்தும் வெள்ளநீர் பாலாற்றில் கலந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அணைக்கட்டு பகுதிக்கு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று பிற்பகல் நிலவரப்படி சுமார் 1,500 கனஅடி நீர் பாலாற்றில் வந்து கொண்டிருந்தது. இந்த மழை நீர் முழுவதும் காஞ்சீபுரம் நோக்கி செல்கிறது.

தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் பாலாற்றில் மேலும் அதிக கனஅடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பாலாற்றில் இறங்க வேண்டாம் எனவும், பாலாற்றங்கரையோரம் மக்கள், குழந்தைகள், இளைஞர்கள் வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story