பராமரிக்கப்படாத அமராவதி ஆற்றுப்பாலம்
பராமரிக்கப்படாத அமராவதி ஆற்றுப்பாலம்
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப் பாலத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி ஆற்றுப்பாலம்
திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப் பாலம் அமைந்துள்ளது.இந்த பாலம் வழியாக நிமிடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மிக முக்கியமான பாலமாக இது உள்ளது. இந்த பாலம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளது. பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரின் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மரக்கன்றுகள் முளைத்துள்ளன. இன்னும் சில மாதங்கள் கடந்தால் மரக்கன்றுகள் பெரிதாகி சுவற்றை உடைத்துவிடும்.
பாலத்தின் நடைபாதை ஓரங்களில் தாவர புதர்கள் வளர்ந்துள்ளன. இதுதவிர பாலத்தின் ரோடுகளில் மண் பரவிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் விலகிச் செல்லும்போது இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்பவ ர்கள் நிலைதடுமாறி விழுந்து தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. பாலத்தின் நுழைவாயில் உள்ள இரும்பு தடுப்புகளில் முள்செடிகள் அடர்ந்து வளர்ந துள்ளன. இவை ரோட்டின் வெள்ளை கோடு வரை பரவி உள்ளதால் ரோட்டின் ஓரத்தில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவ ர்களை காயப்படுத்துகிறது இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பராமரிக்க வேண்டும்
அமராவதி ஆற்றுபாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.வ ிபத்துக்கள் நடப்பதை தவிர்க்க உடனடியாக பராமரிக்கவேண்டும்.
முள்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
-