உடன்குடி பகுதியில் வீடு, கடை குப்பைகளை சாலையில் விசாதீர்கள்
உடன்குடி பகுதியில் வீடு, கடை குப்பைகளை சாலையில் விசாதீர்கள் என பேரூராட்சி தலைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடன்குடி:
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி தலைவி ஹூைமரா அஸ்ஸாப் கல்லாசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீடுகளை சுத்தம் செய்யும்போது வீட்டில் உள்ள குப்பைகளை ஒரு கழிவு சாக்குப்பையில் போட்டு உங்கள் வீட்டு வாசலில் வையுங்கள். தினசரி வீடு தேடி வரும் பேரூராட்சி பணியாளர்கள் குப்பைகளை எடுத்துச் செல்வார்கள். அதை விட்டு விட்டு குப்பைகளை தெருவில் விசாதீர்கள்.
மேலும் வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் எல்லோரும் தங்களிடம் சேரும் குப்பைகளை ஒரு கழிவு சாக்குப்பையில் போட்டு வாசலில் வையுங்கள். தினசரி வரும் பேரூராட்சி பணியாளர்கள் அதை அப்புறப்படுத்தி எடுத்து செல்வார்கள். பேரூராட்சி பணியாளர்கள் குப்பை சேகரிக்க வரவில்லையானால் போன் மூலம் பேரூராட்சிக்கு புகார் செய்யலாம். தமிழக அரசின் சுத்தமான நகரத்தை உருவாக்குவோம் என்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.