அண்ணா தொழிற்சங்க வாயிற் கூட்டம்


அண்ணா தொழிற்சங்க வாயிற் கூட்டம்
x

அண்ணா தொழிற்சங்க வாயிற் கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மண்டல செயலாளர் நீலகண்டன், மண்டல தலைவர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், செந்தில், அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தவமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ேவண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ்வலியுறுத்தப்பட்டன. முடிவில் மண்டல பொருளாளர் மாறன் நன்றி கூறினார்.


Next Story