தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பதற்காக வீடு வீடாக விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பதற்காக வீடு வீடாக விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பதற்காக வீடு வீடாக விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. கார்டுதாரர்களின் வீடுவீடாக சென்று ரேஷன்கடை ஊழியர்கள் நேரில் வழங்கி வருகின்றனர்.
உரிமைத் தொகை திட்டம்
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து பயனாளிகளை தேர்வு செய்வதற்கான பணிகள தொடங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம் அனைத்து ரேஷன் கடை பகுதிகளிலும் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட முகாம் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடக்கிறது. இதற்கு முன்பாக விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன், ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
டோக்கன்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன் கடை பணியாளர்கள் தங்கள் கடைகளில் உள்ள ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் மற்றும் டேக்கனை விநியோகம் செய்தனர். அந்த டோக்கனின் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடம், எந்த தேதியில் ரேஷன்கார்டுதாரர் முகாமுக்கு செல்ல வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள் தினமும் காலையில் 30 வீடுகள், மாலையில் 30 வீடுகள் என மொத்தம் 60 வீடுகளுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வீடுவீடாக வினியோகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 980 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் 600 ரேஷன் கடை பகுதிகளில் நேற்று முதல் விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் தொடங்கப்பட்டு உள்ளது. வீடுவீடாக சென்று ரேஷன்கடை ஊழியர்கள் கார்டுதாரர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை நேரில் வழங்கி வருகின்றனர்.
ரேஷன்கார்டுதாரர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், இடத்தில் நடைபெறும் பதிவு முகாமுக்கு சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2-ம் கட்ட பதிவு முகாம் நடைபெறும் பகுதிகளில் விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம், முகாம் தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.