பனப்பாக்கத்தில் வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி


பனப்பாக்கத்தில் வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி
x

பனப்பாக்கத்தில் வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி

பனப்பாக்கத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடந்தது.பனப்பாக்கத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளுர் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியானான்.

அதன் எதிரொலியாக பனப்பாக்கம் பேரூராட்சியில் விஷக்காய்ச்சல்களான டெங்கு, டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி காசிகார தெரு, பெரிய தெரு, சுப்ரமணிய கோவில் தெரு, வேளாளர் தெரு, அண்ணா நகர், அருந்ததியர் பாளையம், ஆதி திராவிடர் காலனி, தென் மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.


Next Story