வீடு வீடாக டோக்கன் வினியோகம்


வீடு வீடாக டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ந் தேதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

டோக்கன் வினியோகம்

இந்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தை பொருத்த வரையில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 633 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கும் பணி மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி மேற்பார்வையில் தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் சுமார் 750 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. டோக்கன் வினியோகம் வருகிற 8-ந் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து 9-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததும் குமரி மாவட்டத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.


Next Story