வீடு, வீடாக ெசன்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி


வீடு, வீடாக ெசன்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி
x

முகாம்களுக்கு மக்கள் வராததால் வீடு, வீடாக ெசன்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

வேலூர்

முகாம்களுக்கு மக்கள் வராததால் வீடு, வீடாக ெசன்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை பெற்று இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் மாவட்டத்தில் பல வாக்காளர்கள் இணைக்காமல் உள்ளனர்.

அதன்படி அவர்களையும் அட்டையுடன் இணைப்பதற்காக மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்து வாக்குசாவடி மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை முகாம் நடத்திட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 1,300 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

நேற்று பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை. வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேவேளையில் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆர்வம் காட்டவில்லை

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் பலர் இணைத்துள்ளனர். விடுபட்டவர்களையும் இணைப்பதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான இடங்களில் உள்ள முகாம்களுக்கு பொதுமக்கள் வர ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்தது. எனவே அந்த பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்'' என்றனர்.


Next Story