இரட்டை மாட்டு வண்டி பந்தயம்


இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
x

பழனி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

தமிழக அரசின் ஓராண்டு நிறைவு மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பழனி அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதற்கு தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசெல்வி செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி கிழக்கு தி,மு.க. ஒன்றிய செயலாளர் தங்கராஜ், இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் பழனி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, கரூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றன. பந்தயம் 200 மீட்டர், 300 மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு வண்டியும் எத்தனை நிமிடங்களில் போட்டிக்கான தூரத்தை கடந்தது என்று கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.


Next Story