சிக்னல் கோளாறு காரணமாக டபுள் ெடக்கர் ரெயில் 20 நிமிடம் தாமதம்
வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக டபுள் ெடக்கர் ரெயில் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை தினமும் டபுள் ெடக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி வழியாக இரு மார்க்கத்தில் சென்று வருகிறது. முற்றிலும் குளிர்சாதன பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வழக்கம் போல நேற்று காலை 7.25 மணியளவில் சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. காலை 10.32 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது பிளாட்பாரத்தில் டபுள் ெடக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது.
அதன் பிறகு சில நிமிடம் கழித்து புறப்படவேண்டிய ரெயிலுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக டபுள் ெடக்கர் ரெயில் புறப்படவில்லை. இதனால் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிக்னலை சரிசெய்தனர்.
அதன் பிறகு 19 நிமிடம் கழித்து 10.51 மணியளவில் பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் சிறுது நேரம் அவதிப்பட்டனர்.