இரட்டை விநாயகர் கோவில் குடமுழுக்கு


இரட்டை விநாயகர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை வெளிப்பாளையம் இரட்டை விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை வெளிப்பாளையத்தில் பழைமை வாய்ந்த இடுக்கண் தவிர்த்த இரட்டைவிநாயகர் கோவில் உள்ளது. கருவறையில் 2 விநாயகர்கள் ஒன்றாக அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தளமாக இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது. இந்த திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் குடழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9 மணியளவில் மூலவர் மற்றும் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் இரட்டை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story