தாய், தங்கையை கொலை செய்த விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை


தாய், தங்கையை கொலை செய்த விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x

சொத்துத் தகராறில் தாய், தங்கையை கொலை செய்த விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

வேலூர்

வேலூர்

சொத்துத் தகராறில் தாய், தங்கையை கொலை செய்த விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

அடித்துக் கொலை

வேலூர் மாவட்டம் பரதராமி அருகே பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி இந்திராணி (வயது 70). இவர்களது மகன் முனிராஜ் (50). விவசாயி. இவரது தங்கை சின்னம்மாள் (42). இந்திராணியிடம் பணமும், சின்னம்மாளிடம் நிலமும் இருந்துள்ளது. இந்த பணத்தையும், நிலத்தையும் முனிராஜ் அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 10.6.2020 அன்று காலையில் அவர்களுக்குள் மீண்டும் நிலம், பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முனிராஜ், இந்திராணி, சின்னம்மாள் ஆகிய இருவரையும் அருகில் கிடந்த கட்டை மற்றும் கற்களால் தாக்கினார்.

மேலும் தடுக்க வந்த மற்றொரு சகோதரியின் மகன் தினேஷ் என்பவரையும் சரமாரியாக தாக்கினார். இதில் இந்திராணி சம்பவ இடத்திலேயே பலியானார். சின்னம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இரட்டை ஆயுள்தண்டனை

இதுதொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு இறுதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சிவப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த முனிராஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தினேஷை தாக்கியதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் இரட்டை ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து முனிராஜை போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.


Next Story