இரட்டை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு


இரட்டை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
x

பொன்னமராவதியில் பரோலில் வெளியே வந்த இரட்டை ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

இரட்டை ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சந்தை வீதி பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர், பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தம்பதியை கொலை செய்து, விலை உயர்ந்த ஆபரணங்களை கொள்ளையடித்து சென்றார்.

பின்னர் அந்தமானில் தலைமறைவாகி இருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். 2002-ம் ஆண்டு நடந்த இரட்டைக்கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 2005-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி சரவணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கைதி சாவு

இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த சரவணன், சுதந்திர தினத்தை முன்னிட்டு 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பரோலில் தனது சொந்த ஊரான பொன்னமராவதிக்கு வந்தார். இவரும், இவரது நண்பர் ராஜாவும் கடந்த 14-ந் தேதி பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதில் சரவணனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story