பால சாஸ்தா அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை


பால சாஸ்தா அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
x

பால சாஸ்தா அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர்

சேவூர்

கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்புடைய ஆன்மிகத் திருத்தலமான சேவூரில் பாலசாஸ்தா அய்யப்பன் கோவில் ஊரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் பாலசாஸ்தா அய்யப்பன் கோவிலில் நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 9 மணிக்கு மகா மிருத்ஞ்சய ஹோமமும், மாலை 6 மணிக்கு பகவதி சேவையும் நடைபெற்றது. இந்த பூஜைகளை பாலக்காடு தனாதரன் திருமேனி மற்றும் உதவியாளர்களால் நடத்தபட்டது.இந்த ஹோமம், உலக மக்களின் நலனுக்காகவும், டிரஸ்ட் மற்றும் பக்தர்களின் நலனுக்காகவும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை ஸ்ரீபாலசாஸ்தா டிரஸ்ட் சார்பாக செய்திருந்தனர்.



Next Story