டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்ககோத்தகிரியில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் அனுப்பி வைப்பு


டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்ககோத்தகிரியில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:30 AM IST (Updated: 19 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்பதற்காக கோத்தகிரி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 31 பேர் கோத்தகிரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

நீலகிரி

கோத்தகிரி

டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்பதற்காக கோத்தகிரி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 31 பேர் கோத்தகிரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

150 சிறியரக செயற்கைக்கோள்கள்

மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் மாணவர் களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட 150 சிறிய செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் இன்று ஏவப்பட உள்ளது. இதற்கு டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக் கோள் ஏவுதல் திட்டம்-2023 என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 5,000 மாணவர்கள் மூலம் 150 சிறியரக செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிப்புலம் என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

35 மாணவ, மாணவிகள் அனுப்பி வைப்பு

இதில் தமிழ்நாட்டில் இருந்து 3 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் சவுண்டிங் ராக்கெட்டையும் ஸ்பேஸ் ஜோன் அமைப்பே தயாரித்துள்ளது. 3 மீட்டர் உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் எடை 65 கிலோவாகும். சுமார் ரூ.2.5 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தரையில் இருந்து 5 முதல் 6 கி.மீ. தூரத்துக்கு வானில் பாய்ந்து செல்லும் இந்த ராக்கெட்டுக்குள் இருக்கும் செயற்கைக் கோள்கள் மூலம் காற்றின் தரம், ஓசோன் படலத்தின் தன்மை, வெப்பநிலை, காற்றின் அழுத்தம், கார்பன் அளவு உட்பட பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டம் கெங்கரை, கீழ் கோத்தகிரி அரசுமேல்நிலைப் பள்ளி, சோலூர்மட்டம் உயர்நிலைப் பள்ளி, கரிக்கையூர் மற்றும் அரவேனு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 35 மாணவ, மாணவிகள் நேற்று முன் தினம் மாலை மாகபலிபுரம் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து நேற்று அவர்களுக்கு செயற்கை கோள் குறித்து ஹேண்ட்ஸ் ஆன் ட்ரைனிங் எனப்படும் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரே ராக்கெட் மூலம் 150 செயற்கை கோள்களை விண்ணிற்கு செலுத்தும் அரிய நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.


Next Story