டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வரவேற்று பேசினார். திருச்செந்தூர் ஸ்டார் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். பள்ளி முதல்வர் சூசைக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் மோரீஸ் சுதர்சன், முதுநிலை ஆசிரியர்கள் ராஜா ஜான் ஜூட், பச்சிஸ்வரன் ஆகியோர் வளாகத் தேர்வை நடத்தினர்.

மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மதிப்பீடு செய்து, வாய்மொழி தேர்வு நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் சுந்தர் கணேஷ், ஆல்வின், வசந்தி வினோலியா ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story