டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பயின்றோர் கழக விழா
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பயின்றோர் கழக விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் 27-ம் ஆண்டு பயின்றோர் கழக விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியை உமா வரவேற்றார். பயின்றோர் கழக பேரவை செயலர் வைரவமணி தன்னை அறிமுகம் செய்து பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்தார். கல்லூரியின் முன்னாள் மாணவரும், மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியருமான அழகுலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தன்னுடைய பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
விழாவில் கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து 2022- 2023-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலை மற்றும் நடன உதவி பேராசிரியை சுஜாவதி பாடல் பாடினார். தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள். பயின்றோர் கழக பேரவை செயலர் தேவதாசன் பூமன் நன்றி கூறினார். விழாவில் முன்னாள் மாணவர்கள் 41 பேர் கலந்துகொண்டனர். விழாவின் ஒருங்கிணைப்பாளர்களாக உமா மற்றும் ஆல்வின் ஆகியோர் செயலாற்றினார்கள். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரிய-பேராசிரியைகள் செய்திருந்தனர்.