டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்துறை சங்கங்களின் நிறைவு விழா
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் துறை சங்கங்களின் நிறைவு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை சார்ந்த மாஸ், மின்னணு தகவல் தொடர்பு துறை சார்ந்த ஸ்பேஸ் சங்கங்களின் நிறைவு விழா நடந்தது.
மாஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கேட் டைம் ஹேக்கர், அட்டை கலை, புதுமை கருத்து- ஹேக்கத்தான், திட்ட யோசனைகள் போட்டி, பலூன் கார், மூளையதிர்ச்சி தொழில்நுட்பங்கள், குழு விவாதம், வேலைவாய்ப்பு பற்றிய அமர்வு மற்றும் ஸ்பேஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட உலகளாவிய வளர்ச்சிக்கான படைப்பாற்றல் கண்டுபிடிப்புகளில் மின்னணுவியல், செல்போன் சேவையில் திறன் அபிவிருத்தி திட்டம், சைபர் பாதுகாப்பு அடிப்படை விழிப்புணர்வு, மைண்ட் ஸ்கிராம்பில், டெக் இன்டலெக்ட், டாகில் மைண்ட்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழங்கினார்.
இதில் துறைத்தலைவர்கள், சங்கங்களின் பொறுப்பு பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.