டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பட்டப்படிப்புகள்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (பி.பி.இ.எஸ்.) 3 வருட படிப்பு, இளநிலை உடற்கல்வியியல் (பி.பி.எட்.) 2 வருட படிப்பு மற்றும் முதுநிலை உடற்கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.பி.எட்.) 2 வருட படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இங்கு பி.பி.இ.எஸ். 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இடையிலான பாரதியார் தினம் அல்லது குடியரசு தின விளையாட்டு போட்டி போன்றவற்றில் ஏதேனும் ஒரு போட்டியில் பங்குபெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகளின் வயது வரம்பு 21-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

பி.பி.எட். படிப்பு

இக்கல்லூரியில் பி.பி.எட். 2 ஆண்டு இளநிலை உடற்கல்வியியல் படிப்பதற்கு இளநிலை பட்டப்படிப்புடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்குபெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

மாணவ-மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது பல்கலைக்கழகம் சார்பில் ஏதேனும் ஒரு விளையாட்டில் பங்கேற்றிருந்தால், அவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும். இக்கல்லூரியில் பி.பி.இ.எஸ். பயின்றோருக்கும் மற்றும் ஆதித்தனார் கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றோருக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும்.

எம்.பி.எட். படிப்பு

எம்.பி.எட். 2 ஆண்டு முதுநிலை உடற்கல்வியியல் படிக்க இளநிலை உடற்கல்வியியல் (பி.பி.எட்.) பயின்று இருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி வேண்டும். மேலும் அதில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எட். பயின்றவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும். மேலும், பல்கலைக்கழக தேர்வில் இளநிலை உடற்கல்வியியலில் தங்க பதக்கம் (முதல் தரவரிசை) பெற்றவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும்.

சிறப்பு அம்சங்கள்

இக்கல்லூரி இருபாலருக்குமான பழமைவாய்ந்த மிக சிறப்பான கல்லூரி ஆகும். இக்கல்லூரி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. மேலும், தேசிய தர மதிப்பீட்டு குழு மறுமதிப்பீட்டில் 'ஏ' சான்று வழங்கி உள்ளது. தரமான ஆசிரியர்கள், நேர்த்தியான விளையாட்டு மைதானங்கள் மற்றும் சிறப்பான தங்கும் விடுதிகள் இக்கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அளவில் மாணவ-மாணவிகள் பதக்கங்கள் வென்று வருகின்றனர்.

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பை பெற்று தருகிறது. இக்கல்லூரி பற்றிய அனைத்து விவரங்களும் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்க...

மாணவ-மாணவிகள் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் www.tnpesu.edu.in என்ற இணையதளத்தின் வாயிலாக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் www.drsacpe.com என்ற இக்கல்லூரி இணையம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இரு இணையத்திலும் தங்களது கல்வி மற்றும் இதர சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் குறைவான இடங்களே இருப்பதால், மாணவ-மாணவிகள் விரைவில் விண்ணப்பித்து கல்லூரியில் சேருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை 04639-245110, 220590 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story