டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில்ஆசிரியர் தின விழா
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். பி.பி.எஸ் 2-ம் ஆண்டு மாணவி சாலினி வரவேற்று பேசினார். பி.பி.எஸ் 2-ம் மாணவி மணிமேகலை அறிமுக உரையாற்றினார். ஆசிரியர் தின சிறப்பு விருந்தினராக தோழப்பன்பண்ணை அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் ஜோசப் வினிஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பி.பி.எஸ் 2-ம் ஆண்டு மாணவர் மாதவன், மாணவி நிஷா ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அனுவித்து, நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சிகளை, மாணவர் முத்துராமன் தொகுத்து வழங்கினார்.
நிழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பி.பி.எஸ் 2-ம் ஆண்டு மாணவர் தயானந்தன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் சிவா மற்றும் பி.பி.எஸ் 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.