டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி ஓவியப்போட்டி


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி ஓவியப்போட்டி
x

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி ஓவியப்போட்டி 8, 9-ந் தேதிகளில் நடக்கிறது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 6 இளநிலை பட்டப்படிப்புகளும், 3 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளது. கல்லூரியில் தரமான கல்வி வழங்குவதுடன் மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது.

இந்த கல்லூரியில் அமைப்பியல் துறையானது (CIVIL) 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நவீன உலகத்திற்கு ேதவையான ஆற்றலையும். புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களையும் அறிந்து அதை நடைமுறைப்படுத்தும் திறமையுடைய மாணவர்களை உருவாக்குவதே இந்த துறையின் நோக்கம் ஆகும்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் அமைப்பியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environment Protection) என்ற தலைப்பில் இணையவழி ஓவியப்போட்டி வருகிற 8, 9-ந் தேதிகளில் (வெள்ளி, சனிக்கிழமை) நடக்கிறது. இந்த நிகழ்ச்சி மாணவ-மாணவிகளின் கற்பனை மற்றும் செயல் திறனை அதிகரிக்க வழிவகுக்கும். இதில் கலந்து கொள்வதற்கு பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மற்றும் படிக்கும் மாணவ-மாணவிகள் https://forms.gle/Z6peah7KMatnbJNNA என்ற இணைப்பின் மூலம் பங்கு பெறலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையின் கீழ் அமைப்பியல் துறை பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள. மேலும் இத்துறை மற்றும் போட்டி சார்ந்த விவரங்களுக்கு www.drsacoe.org என்ற கல்லூரியின் இணையதளத்திலும், 9486204458, 9443080530 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


Next Story