முதியவரின் உடலை கால்வாய்தண்ணீரில் தூக்கி ெசன்ற பொதுமக்கள்


முதியவரின் உடலை கால்வாய்தண்ணீரில் தூக்கி ெசன்ற பொதுமக்கள்
x

சேரன்மாதேவி அருகே முதியவரின் உடலை கால்வாய் தண்ணீரில் தூக்கி ெசன்ற பொதுமக்கள் புதிய பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே மேலச்செவல் மாணிக்கநகர் பகுதி மக்கள், ஊருக்கு வடபுறமுள்ள மயானத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள பாளையங்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் சேதமடைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மயானத்துக்கு செல்வதற்கு பாளையங்கால்வாயில் இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று கிராம மக்கள் பாளையங்கால்வாயின் இருபுறமும் கயிறு கட்டினர். பின்னர் முதியவரின் உடலை தூக்கியவாறு கால்வாயில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தத்தளித்தவாறு மயானத்துக்கு சென்றனர். எனவே அப்பகுதியில் மயானத்துக்கு செல்வதற்கு புதிய பாலம் அமைத்து தர வேண்டும். இல்லையெனில் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Next Story