ரூ.75 லட்சத்தில் குளங்களை தூர்வாரும் பணி


ரூ.75 லட்சத்தில் குளங்களை தூர்வாரும் பணி
x

ரூ.75 லட்சத்தில் குளங்களை தூர்வாரும் பணி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டியான் குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் முதல்கட்டமாக குரும்பலூர் பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 5 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டியான்குளம், தெப்பக்குளம், சின்னான் குளம் ஆகிய 3 குளங்கள் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும், மருதையான் குளம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், நல்லதண்ணி குளம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது, என்றார். முன்னதாக அவர் குரும்பலூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

இதில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், செயல் அலுவலர் மெர்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story