பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி


பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
x

சீர்காழி, திருக்கடையூர் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி, திருக்கடையூர் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி

சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட புதுமண்ணியாறு பாசன வாய்க்கால், பழையபாளையம் வாய்க்கால், பெரியகுப்பம் வாய்க்கால், அய்யன் குளத்துமடை வாய்க்கால், ஏரி வாய்க்கால், குடவேலி வாய்க்கால், கொடக்காரமூளை வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

உதவி கலெக்டர் ஆய்வு

இதை தொடர்ந்து உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி பகுதியில் பாசன மற்றும் வடிகால வாய்கால்கள் தூர்வாரும் பணியை நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்களை முழுமையாக தூர்வார வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பொறியாளர் கனக சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

திருக்கடையூர்

இதேபோல திருக்கடையூரில் உள்ள ராமச்சந்திரன் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை உதவி கலெக்டர் நாராயணன், வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் வீரப்பன், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

--



Next Story