வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்


வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாகுபுரம் தொழிற்சாலை சார்பில் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்க விழா நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் குளத்திற்கு ஆத்தூரான் காலில் இருந்து வாய்க்கால் மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீர் வந்து ஆத்தூர் குளத்திற்கு வரும். இவ்வழியில் புண்ணை சாத்தான்குறிச்சி, மேலாத்தூர், குச்சிக்காடு, சொக்கப்பளக்கரை, முத்து வீரன் பாலம் போன்ற பகுதிகளில் உள்ள வயல் மற்றும் வாழை மரங்கள் இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. இதில் கடந்த பல ஆண்டுகளாக வாய்க்கால் தூர்வாரப்படாமல் அமலை செடிகளால் மூழ்கியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஆத்தூர் சுற்று வட்டார வெற்றிலை விவசாய சங்க தலைவரும், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவருமான ஏ.பி.சதீஷ்குமார் குரங்கணியில் இருந்து ஆத்தூர் குளம் வரை உள்ள வாய்க்காலை தூர்வார வேண்டுமென்று சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த டி.சி.டபிள்யு. நிறுவனம் விவசாயிகளின் நலனுக்காக நெல் மற்றும் வாழை போன்ற பயிர்களை காப்பாற்றுவதற்காக குரங்கணியில் இருந்து ஆத்தூர் குளம் வரை உள்ள வாய்க்காலை தூர்வாரும் பணியை செய்வதற்கு ஒப்புக்கொண்டது. அதன்படி இந்த பணிகளை ஆத்தூர் சுற்று வட்டார வெற்றி விவசாய சங்க தலைவர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சாகுபுரம் தொழிற்சாலையின் பொது ஜன தொடர்பு அதிகாரி பிரகாஷ் மற்றும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story