வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாய பணிகள் தடைபடாத வகையில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

விவசாய பணிகள் தடைபடாத வகையில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.

வாய்க்கால் தூர்வாரும் பணி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் ஊராட்சியில் ஆர்ப்பாவூர் வாய்க்கால் 6 கி.மீ., உத்திரங்குடி, வாய்க்கால் 6.50 கி.மீ., கீரந்தக்குடி வாய்க்கால் 2.50 கி.மீ. மற்றும் சிட்டிலிங்கம் வாய்க்கால் 3.50 கி.மீ வரை தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், அடுத்த மாதம் (ஜூன்) மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் சூழல் உள்ளது. எனவே விவசாய பணிகள் எந்த விதத்திலும் தடைபடாத வகையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

அதேபோல் வலங்கைமான் வட்டம் நத்தம் வாய்க்கால், பாடகச்சேரி வாய்க்கால், செம்மங்குடி வாய்க்கால், வடக்குபட்டம் கிராமம் கிளியன் வாய்க்கால், நார்த்தாங்குடி வாய்க்கால், மாணிக்கமங்கலம் வாய்க்கால், மருதடி வாயக்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தஞ்சை வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர்கள் கனகரத்தினம், தியாகேசன், குடவாசல் தாசில்தார் குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story