திரவுபதை அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடக்கம்


திரவுபதை அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தோப்புத்துறை திரவுபதை அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் உள்ள திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி பாகவதர் குழுவினரால் மகாபாரத கதை நாடக நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் நாளை (சனிக்கிழமை) அரவாண் களப்பலி, 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை9 அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 7-ந் தேதி (திங்கட்கிழமை) படுகள நிகழ்ச்சியும், தொடர்ந்து திரவுபதையம்மன் கூந்தல் முடிதலும் நடக்கிறது. அன்று மாலை 4 மணியளவில் அம்மன் வீதியுலாவாக புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் அக்னிபிரவேசம் எனப்படும் தீமிதி விழா நடக்கிறது.


Next Story