திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
கலியநகரி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் 61-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா கலியநகரி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் 61-ம் ஆண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி 16- நாட்கள் நடைபெற்றது. விழாவில் அரக்குமா மாளிகை, திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை, நச்சுப்பொய்கை, பூ கொய்தல், பீமன் வேஷம், பசுக் கலைத்தல், படுகளம், அர்ஜுனன் தபசு, பூக்குழி இறங்குதல் மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் அன்னதானமும் வாணவேடிக்கை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Related Tags :
Next Story