திராவிடர் கழக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம்
விழுப்புரம்:
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று காலை திராவிடர் கழக இளைஞரணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கிப்பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். அமைப்பாளர் வசந்த்குமார் வரவேற்றார். தலைமைக்கழக அமைப்பாளர் இளம்பரிதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் தம்பிபிரபாகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட தலைவர்கள் சுப்பராயன், அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் பரணிதரன், பரந்தாமன், அமைப்பாளர்கள் கோபண்ணா, வில்லவன்கோதை, நகர தலைவர்கள் பூங்கான், பச்சையப்பன், நகர செயலாளர்கள் பழனிவேல், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story