தமிழகத்தில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்


தமிழகத்தில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

தமிழக கவர்னர்

ராமேசுவரத்தில் நேற்று ராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை பொதுக்கூட்டம் பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சிகாமணி வரவேற்றார். ராமேசுவரம் நகர சபை சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் பிச்சை தட்சிணாமூர்த்தி மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி என கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய அரசியலமைப்பு சட்டப்படிதான் அனைவரும் செயலாற்ற வேண்டும். ஆனால் தமிழக கவர்னரோ அப்படி செயலாற்றுவது கிடையாது. கவர்னருக்குரிய பணிகளை செய்யாமல் மற்ற எல்லா பணிகளையும் செய்து வருகிறார். ராஜ் பவனை ஆர்.எஸ்.எஸ் அலுவலகமாக மாற்றி வருகிறார்.

பெண்கள் பாதுகாப்பு

தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஐ சமூக நீதி நாளாக அறிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறோம். அவரும் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சேதுசமுத்திர திட்டம் மட்டும் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ராமேசுவரம் மட்டுமல்லாது தென் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தால் அதிக வளர்ச்சி அடையும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் பெருகும். இவர் அவர் பேசினார்.


Next Story