கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப் போட்டி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடந்தது.
ஓவியப்போட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் உலக ஓசோன் தினத்தையொட்டி உலக வெப்பமயமாதலை தடுக்கம் பொருட்டும், ஓசோன் படல பாதிப்பை குறைக்கும் பொருட்டும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 'பூமியில் உயிரினங்களை பாதுகாக்கும் உலகளாவிய ஒத்துழைப்பு' என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடந்தது. இந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
165 மாணவ-மாணவிகள்
போட்டியில் 65 பள்ளிகளை சேர்ந்த 165 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளரும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான மகேந்திரன் வரவேற்று, பேட்டியின் விதிமுறைகளை எடுத்துரைத்தார். இதில், ஓசூர் கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அல்போன்சாமேரி மற்றும் ஜோஸ்பின் மேரி, கிரேஸ் ராணி, செல்வி, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.