வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி
வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது. இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் என் வாக்கு என் உரிமை, மாற்றுத்திறனாளிகளை 100 சதவீதம் வாக்களிக்க செய்தல், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் கோலங்கள் வரையப்பட்டன. போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் சார்பில் போடப்பட்ட கோலங்களை ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய ஆணையர் சுமதி, மேலாளர் சாந்தி, கடலங்குடி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயஸ்ரீ, கீதா, ஜீவா, மோகனாம்பாள் ஆகியோர் உடன் இருந்தனர்.