அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி


அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த குளத்தை ரூ.1 கோடியில் அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த குளத்தை ரூ.1 கோடியில் அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரியாப்பிள்ளை குளம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் அரியாப்பிள்ளை குளம் உள்ளது. பல ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல், சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது சீர்காழி நகராட்சி மூலம் குளத்தை அழகுபடுத்தும் விதமாக கரைகளை பலப்படுத்தி, நீர் நிரப்பி, சுற்றி நடைபாதை அமைக்க ரூ.1 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த வாரம் பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன்...

இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அரியாப்பிள்ளை குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூர்வாரி,. அழகுபடுத்தும் பணிகளை தொடங்க நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து நேற்று குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முதல் கட்டமாக நடந்தது. அப்போது சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குளத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக குளத்தை தூய்மைப்படுத்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா ஆகியோர் மேற்பார்வையில் பொக்லின் எந்திரம் மூலமாக பணிகள் நடந்தன.


Next Story