பச்சையாறு பொன்னாக்குடியான் கால்வாய் தூர்வாரும் பணி; எம்.எல்.ஏ. ஆய்வு


பச்சையாறு பொன்னாக்குடியான் கால்வாய் தூர்வாரும் பணி; எம்.எல்.ஏ. ஆய்வு
x

களக்காடு பச்சையாறு பொன்னாக்குடியான் கால்வாய் தூர்வாரும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் பாளையங்கோட்டை வட்டார விவசாயிகளின் கோரிக்கையான பச்சையாறு பொன்னாக்குடியான் கால்வாயை உடனடியாக தூர்வாரும் பணியினை செய்ய பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் நேற்று நாங்குநேரி தொகுதியில் களக்காடு வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சிங்கிகுளம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதியின் வளர்ச்சிக்காக நடைபெறும் பணிகளான களக்காடு பச்சையாறு பொன்னாக்குடியான் கால்வாயை தூர்வாரும் பணிகளையும், சிங்கிகுளம் பகுதியில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்படுகின்ற மேல்மட்ட பாலப்பணிகளையும் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சிங்கிகுளம் கிராம காங்கிரஸ் தலைவர் பால்பாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story