மழைநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை
திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மழைநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில்கடந்த வாரம் கடும் மழை காரணமாக 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழைநீர் கால்வாய்களை தூர்வார கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா ஆகிேயார் அதிகாரிகளுடன் நேரில் சென்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள நீர் வரத்து கால்வாய்கள், சின்னகசிநாயக்கன்பட்டி ஏரியில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய், நாகாத்தம்மன் கோவில் அருகே உள்ள நீர்வரத்து கால்வாய் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றை தூர்வார நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் குட்டி என்கின்ற சீனிவாசன், கோபிநாத், செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.