ரூ.10 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி


ரூ.10 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 9 Jun 2023 12:45 AM IST (Updated: 9 Jun 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

ரூ.10 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி தொடங்கியது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் தாமரைக்குளத்தை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், அபிநயா அருண்குமார், கீழப்பூதனூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, ஊராட்சி செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story