திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் மதுப்பிரியர்களின் அட்டகாசம்


திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் மதுப்பிரியர்களின் அட்டகாசம்
x

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் மதுப்பிரியர்களின் அட்டகாசம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ்நிலையத்தில் மதுப்பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பழைய பஸ் நிலையம்

திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ்நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. பஸ்நிலையம் திறக்கப்பட்ட போதிலும் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியால் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பஸ் நிலையத்தில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மதுப்பிரியர்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

பயணிகள் அவதி

மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும், பள்ளி அருகிலும், பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனை அருகிலும் டாஸ்மாக் கடை அமைய கூடாது என்பது அரசு உத்தரவு. ஆனால் திருப்பூரில் உத்தரவை மீறி பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. அதுபோல் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இங்கு மது அருந்தும் மதுப்பிரியர்கள் இரவு பஸ்நிலையத்திற்குள் சென்று, வாடகைக்கடைகள் முன்பும், பஸ்நிலைய நடைபாதையிலும் போதையில் அலங்கோலமாக விழுந்து கிடக்கின்றனர்.

மேலும் பயணிகளையும் தொந்தரவு செய்கின்றனர். இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டாஸ்மாக் கடையை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு மாற்றி வைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் இத்தகைய மதுப்பிரியர்களின் நடவடிக்கையை தடுக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.



Next Story