மதுவில் திராவகம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
அருமனை அருகே மதுவில் திராவகம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை:
அருமனை அருகே மதுவில் திராவகம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
அருமனை அருகே உள்ள மஞ்சளோடு பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி. இவருடைய மகன் விஜேஷ் (வயது 27), கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. விஜேசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அவரது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். விஜேஷ் மட்டும் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். இதனால் விஜேஷ் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் விேஜஷ் மதுவில் திராவகம் கலந்து குடித்து வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அருமனை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.