நெல்லையில் 10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


நெல்லையில் 10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x

நெல்லையில். 10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடைகளில் சீல் வைக்க சென்றபோது எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லையில். 10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடைகளில் சீல் வைக்க சென்றபோது எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

6 கடைகள்

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றிற்கு தீவிர வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெல்லை ஸ்ரீபுரத்தில் ஒரு வளாகத்தில் உள்ள கடைகளில் 6 கடைகள் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருந்துள்ளது. இந்த வரி பாக்கிைய செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் பாக்கியை செலுத்தவில்லை.

இந்தநிலையில் நேற்று அந்த கடைக்கு `சீல்' வைக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகள் வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் `சீல்' வைத்தனர்.

10 வீடுகளில்...

இதேபோல் தச்சை மண்டலம் முகம்மது நயினார் பள்ளிவாசல் பகுதியில் 1-வது தெற்கு தெருவில் ஒரு வீடு, 2-வது வடக்கு தெருவில் ஒரு வீடு, மேலப்பாளையம் மண்டலம் 48-வது வார்டில் அம்பிகாபுரத்தில் 3 குடியிருப்பு பகுதியிலும், பாளையங்கோட்டை மண்டலத்தில் வார்டு-9 லோடிகான் தெருவில் 2 குடியிருப்பு பகுதியிலும், முனையாடுவார் நாயனார் தெருவில் ஒரு குடியிருப்பிலும், நெல்லை மண்டலம் வார்டு 19-ல் 2 குடியிருப்பு பகுதியிலும், ஆக மொத்தம் 10 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.

ஆணையாளர் வேண்டுகோள்

வருகிற மார்ச் 31-ந்தேதி வரை அனைத்து நாட்களிலும் கணினி வரிவசூல் மையங்கள் செயல்படுவதால் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டண வரியினை பொதுமக்கள், வணிக வளாக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சீல் வைப்பு போன்ற நடவடிக்கையை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.


Next Story