ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம்


ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம்
x

திருவெண்காட்டில் டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:-

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஊராட்சியில் அம்பேத்கர் நகர் என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு கடந்த 3 நாட்களாக இயங்காமல் உள்ளது. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்யவில்லை. இதையடுத்து அவர் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்படவில்லை. எனவே ஜெனரேட்டர் உதவியுடன் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story