குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர்

வெள்ளகோவில்

கொடுமுடியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் முத்தூர், காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு பிரதான குழாய் மூலம் குடிநீர் தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி -கோவை பிரதான சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டுள்ளது.

திருச்சி- கோவை சாலையில் போக்குவரத்து அதிகமாகவும், கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இந்த இடத்தில் உடைந்த குழாய்கள் பல மாதங்களாகியும் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் தார்ச்சாலைகள் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. ஆகையால் குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாய் உடைப்பை உடனே சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் சேதமான சாலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story