குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சபை கூட்டத்தில் ஆணையாளம் உறுதியளித்தார்.
ஊட்டி,
தமிழகத்தில் சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஊட்டி நகராட்சி 22-வது வார்டில் சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 22-வது வார்டிற்கு உட்பட்ட புட்சர் தெரு, மெயின் பஜார், அப்பர் பஜார், மருத்துவமனை சாலை, ஜெயில் ஹில் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அவர்கள் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் இருப்பதாகவும், அதை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார்.
கூட்டத்தில் நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் கேத்தி பேரூராட்சி 9-வது வார்டில் பகுதியில் வார்டு குழு மற்றும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.