ரூ.40 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணி தொடக்கம்


ரூ.40 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணி தொடக்கம்
x

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் ரூ.40 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம் பஞ்சாயத்துக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கான தொடக்க விழா நேற்று கிருஷ்ணாபுரம் ஆர்ச் அருகே நடைபெற்றது.

விழாவுக்கு பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்க பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இதில் தி.மு.க. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், நொச்சிக்குளம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் சீனிவாசன், ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணவேணி, பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சமூகரெங்கபுரம் கலையரங்கம் திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி.ஜோசப் பெல்சி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே.சித்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி, பஞ்சாயத்து தலைவர் அந்தோணி அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


Next Story