காவிரி குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்


காவிரி குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்
x

காவிரி குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி பேரூராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வினியோகம் செய்யப்படும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story