திருச்சியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்


திருச்சியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x

திருச்சியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன்நீர்ப்பணி நிலையம், பெரியார்நகர் கலெக்டர் வெல் நீரேற்றுநிலையம், கலெக்டர்வெல் அய்யாளம்மன்படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம் -பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மின்வாரியத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார்நகர் கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யகொண்டான்திருமலை, தெற்கு ராமலிங்கநகர், ஆல்பாநகர், பாத்திமாநகர், கருமண்டபம், கல்லாங்காடு ஆகிய பகுதிகளிலும் கலெக்டர்வெல் அய்யாளம்மன்படித்துறை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ்நகர், பாரிநகர், எல்லைக்குடி, காவிரிநகர், கணேஷ்நகர், சந்தோஷ்நகர், ஆலத்தூர், கல்கண்டார்கோட்டை, திருவெறும்பூர் வள்ளுவர்நகர், திருவெறும்பூர் ஒன்றிய காலனி, பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ்நகர், ஜெயாநகர் மற்றும் பிராட்டியூர்காவேரிநகர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் வினியோகம் இருக்காது. நாளை (புதன்கிழமை) முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story