ரூ.18 லட்சத்தில் குடிநீர் தொட்டி; அமைச்சர் அடிக்கல் நாட்டினார்


ரூ.18 லட்சத்தில் குடிநீர் தொட்டி; அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
x

கடையம் அருகே ரூ.18 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள குடிநீர் தொட்டிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் சேவைக்காரன்பட்டி ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பில் குடிநீர் ஜம்பு தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து சேவைக்காரன்பட்டி ஆர்.சி. சர்ச் வடக்கு தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்டு சாலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குடிநீர் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, சிமெண்டு சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப், மாலிக் நகர் ஹிலால் தொடக்கப்பள்ளி செயலாளர் அகமது ஈசாக், ஊராட்சி செயலாளர்கள் கதிரேசன், ஜெயம் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story